
திருமலை நகர் 2வது பிரதான சாலையில் செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் பூமி பூஜையுடன் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மாநகராட்சி அதிகாரிகள் 39 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிரிஜாசந்திரன் மற்றும் ஒப்பந்ததாரர், பணியாளர்கள் கலந்து கொண்டனர். குறிப்பிட்ட காலத்திற்குள் சரியான அளவீட்டுடன் தரமுடன் சாலை பணியை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மண்டலக்குழு தலைவர் கோரிக்கை விடுத்தார்.