சிட்லப்பாக்கத்தில் விநாயகர் பக்தர் சீனிவாசன் 17 வது ஆண்டாக 21 ஆயிரம் விநாயகர் சிலைகள், பொம்மைகள், படங்கள் என அரை சென்டிமீட்டர் முதல் 9 அடி உயரம் உள்ள சிலைகள் தயார் செய்தும், சேகரித்தும் அவரின் திருமண மண்டபத்தில் மூன்று அடுக்குகளிலும் காட்சிப்படுத்தியுள்ளார். முற்றிலும் இலவசமாக 11 நாட்கள் 07.09.24 முதல் 17.09.24 வரை காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை திறக்கப்படும். இந்த விநாயகர் கண்காட்சியை சிறுவர்கள், பெரியவர்கள் என ஆர்வமாக பார்த்து வருகிறார்கள். தங்கம், வெள்ளி, பவளம் என உலோகங்கள், படகில் சவாரி, ரெயிலில் சவாரி, சுழல் காட்சி, கண்ணாடி மாளிகை, வன விநாயகர் விளையாட்டு விநாயகர் என பல்வேறு விநாயகர்களை காணலாம். இந்த விநாயகர் கண்காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தாம்பரம் துணை மேயர் ஜி.காமராஜ் சுற்றிப்பார்த்து சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் கண்காட்சி நடத்திவரும் விநாயகா குழுமத் தலைவர் சீனிவாசனை பாராட்டினார். சீனிவாசன் பேசும்போது: விபத்து ஒன்றில் கை சேதமான நிலையில் தன்னம்பிக்கை அளித்த கடவுள் விநாயகர் அதனால் 17 ஆண்டுகளாக 500 விநாயகர் சிலைகளில் ஆரம்பித்து தற்போது 21 ஆயிரம் விநாயர்களுடன் தானே கண்காட்சியை அமைத்து பார்வையாளர்களை இலவசமாக காண ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.