விநாகர் சதுர்த்தியன்று விநாயருக்கு பிடித்த கொழுக்கட்டையில் ஒரு வகையான தெரளி கொழுக்கட்டை எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம். விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: தெரளி கொழுக்கட்டை தேவையான பொருட்கள்: அரிசி மாவு- 1 கப், வெல்லம் 1 கப், தண்ணீர்- 1 கப், தேங்காய் முக்கால் கப், ஏலக்காய் பொடி- 2 டீஸ்பூன், சுக்கு பொடி- 1 டீஸ்பூன் செய்முறை: தேங்காயை துருவிக்கொள்ளவும். வெல்லத்தை நன்றாக பொடித்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்தைப் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி சூடேற்றி, வெல்லம் கரைந்த பின் இறக்கி, வடிகட்டி மீண்டும் அதே வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின்னர் அத்துடன் துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, சுக்கு பொடி சேர்த்து கிளறி, அரிசி மாவை மெதுவாக சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும். ஓரளவு கெட்டியானதும் இறக்கி, குளிர வைக்க வேண்டும். இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, தெரளி இலையில் வைத்து சுருட்டி, வைக்கவும். செய்து வைத்த கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் வைக்க வேண்டும். இட்லி பாத்திரத்தினுள் தட்டை வைத்து 20 நிமிடம் வேக வைத்து இறக்கினால், தெரளி கொழுக்கட்டை ரெடி!!