தேவையான பொருட்கள்: கீரை- 200 கிராம் (2 கெட்டுகள்) , தண்ணீர் 1 கப், எண்ணெய்- 1 மேசைக்கரண்டி +2 மேசைக்கரண்டி , வெங்காயம்- 1 கப் (நறுக்கியது), தக்காளி 1 கப் (சதுர வடிவில் நறுக்கியது), பச்சை மிளகாய்- 1 டீ ஸ்பூன் (நறுக்கியது), முழு முந்திரி பருப்பு 4, உப்பு- 1 தேக்கரண்டி, சிவப்பு மிளகாய் தூள் -1 தேக்கரண்டி, ப்ரஷ் க்ரீம், 2 மேசைக்கரண்டி+அலங்கரிக்க, பன்னீர் துண்டுகள் 1 கப் செய்முறை: ஓரு வடிகட்டும் பாத்திரத்தில் கீரையை எடுத்து 2-3 முறை அலசி தண்ணீரை வடிகட்டி கொள்ளவும். அதை இப்பொழுது ஒரு ப்ரஷ்ஷர் குக்கரில் சேர்க்கவும். ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரை வேக வைக்கவும். அதே சமயத்தில் அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதனுடன் நறுக்கிய தக்காளி பழத்தை சேர்க்க வேண்டும். நன்றாக கிளறவும். பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும். இப்பொழுது முந்திரி பருப்பை சேர்த்து நன்றாக ஒரு நிமிடம் வதக்கவும். குக்கரின் மூடியை திறந்து வேக வைத்த கீரையை ஒரு 10 நிமிடங்கள் ஆற வைக்கவும். வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்ஸி சாரில் போடவும். நன்றாக வழுவழுப்பாக அரைத்து கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். இப்பொழுது அரைத்த கலவையை அதில் கொட்டி நன்றாக வதக்கவும். இப்பொழுது 1 மேசைக்கரண்டி உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதனுடன் 2 மேசைக்கரண்டி ப்ரஷ் க்ரீம் சேர்த்து கலக்கவும். இப்பொழுது மூடியை மூடி ஒரு நிமிடங்கள் சமைக்கவும். அதை வேக விடவும். இப்பொழுது வேக வைத்த கீரையை மிக்ஸி சாரில் சேர்க்கவும். நன்றாக வழுவழுப்பாக மிதமான பதத்தில் அரைத்து வைத்து கொள்ளுங்கள். இப்பொழுது அரைத்த கீரையை கடாயில் உள்ள மசாலா கலவையுடன் சேர்க்கவும்.மறுபடியும் மூடியை மூடி ஒரு நிமிடம் வரை சமைக்கவும். பிறகு மூடியை திறந்து நறுக்கி வைத்த பன்னீரை கறியில் சேர்க்கவும்.பிறகு அதை ஒரு பௌலிற்கு மாற்றி ப்ரஷ் க்ரீம் கொண்டு அலங்கரிக்கவும். சூடாக பரிமாறவும்.