தேவையான பொருட்கள்: பனீர் -100 கிராம், ஃப்ரெஷ் பச்சை பட்டானி வேக வைத்தது 50 கிராம், நறுக்கிய வெங்காயம் – 150 கிராம், நறுக்கிய தக்காளி – 75 கிராம், பூண்டு- 25 கிராம், கரம் மசாலா 20 கிராம், நீள காய்ந்த மிளகாய்- 2, சீரகம்- 10 கிராம், சோம்பு 10 கிராம், செட்டிநாடு டிரை மசாலா பொடி, -30 கிராம், தக்காளி ப்யூரி 5 மிலி, இஞ்சி பூண்டு விழுது- 20 கிராம், உப்பு -சுவைக்கேற்ப, மிளகு தூள்- 20 கிராம், நல்லெண்ணெய் -20 கிராம், ரீஃபைண்டு ஆயில்- 40 கிராம், தேங்காய் பால் – 50 மிலி செய்முறை: 1. பனீரை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பன்னீரை எண்ணெயில் பொரித்து ஓரமாக வைத்து விடவும். 2. எண்ணெயை சூடாக்கி, அதில் காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு மற்றும் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும். பூண்டு வெங்காயம் ஆகியவற்றை அதே பாத்திரத்தில் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். 3. பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி ப்யூரி, நறுக்கிய தக்காளிகள் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, மொத்த கலவையையும் தண்ணீரால் மூழ்கும் வரை தண்ணீர் சேர்க்கவும். 4. மிளகாய் தூள் மற்றும் செட்டிநாடு மசாலா பவுடரை அதில் சேர்க்கவும். மசாலா வாசம் மாறியவுடன் குறைந்த தீயில் வேக வைக்கவும். 5. பனீர் மற்றும் பச்சை பட்டானி ஆகியவற்றை கிரேவியில் சேர்க்கவும் கடைசியாக தேங்காய் பாலை ஊற்றி முடிக்கவும். 6. கொத்தமல்லியை அலங்காரமாகச் சேர்த்து. சப்பாத்தி, மலபார் பராத்தா அல்லது அரிசியுடன் பரிமாறவும்.