தேவையானவை: கடலைப்பருப்பு – 100 கிராம், வாழைக்காய், தக்காளி, வெங்காயம் தலா1, பச்சை மிளகாய்2, பூண்டு 3பல், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், தேங்காய் துண்டுகள்-2, சீரகம், தனியா -தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய்3, குழம்பு பொடி – ஒன்றரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை -சிறிதளவு, எண்ணெய் -ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு- தேவையான அளவு. செய்முறை: தேங்காய், சீரகம், தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து ஒன்றிரண்டாக பொடிக்கவும். காய்கறிகளை பொடியாக நறுக்கவும்.குக்கரில் கடலைப்பருப்பு, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு கொதி வந்ததும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் ஒன்றிரண்டாக அரைத்த பொடி, குழம்பு பொடி, உப்பு, பெருங்காயம் போட்டு நறுக்கிய வாழைக்காயைப் போட்டு வதக்கி, வேக வைத்த பருப்பில் கொட்டி, சிறிது தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். அருமையான சுவையாக இருக்கும். உங்களின் குடும்பத்தினர் சாப்பிட்டு பாராட்டுவார்கள்.