தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கமிஷனர் பதவியேற்பு மேயர் துணை மேயர் வாழ்த்து

தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக பணிபுரிந்து அழகுமீனா பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.

சேலம் மாநகராட்சி கமிஷனர் ஆக பதவி வகித்த பாலசந்தர் தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக பணி மாற்றம் செய்யப்பட்டார். இன்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் புதிய கமிஷனர் பாலச்சந்தர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி கமிஷனர் பாலசந்தருக்கு மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி துணை மேயர் கோ. காமராஜ் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.