சேலையூரில் சாலை தூங்கிய போதை ஓட்டுனரை தண்ணீர் தெளித்து எழுப்பிய ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் அடித்துக்கொலை. கூப்பிட்ட குரலுக்கு உதவி செய்தவர் கொலையானதால் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் சோகம்

சேலையூர் ராஜா ஐய்யர் தெருவை சேர்ந்தவர் கிஷ்ணமூர்த்தி(69) ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர், இவர் மனைவி ஜெயசாண்டிஸ்வரி(60),

கடந்த 12ம் தேதி இரவு 8 மணியளவில் கிஷ்ணமூர்த்தி வீட்டின் அருகே குடிபோதையில் ஒருவர் சாலை படுத்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் கூறியதால் டார்ச் லைட்டுடன் பார்க்க சென்றார். போதை இளைஞரை தண்ணீர் தெளித்து எழுப்பிவிட்டபோது ஆத்திரத்தில் அந்த போதை இளைஞர் கிருஷ்ணமூர்த்தியை தாக்கி கீழே தள்ளினால் இதில் பின் மண்டை அங்குள்ள கல்லில் பட்டு பலத்த காயமடைந்து மயக்க நிலைக்கு சென்ற கிருஷ்ணமூர்த்தியை அருகிள் உள்ளவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதே வேளையில் தாக்கிய போதை இளைஞரை விரட்டிப் பிடித்து தாக்கிய பொதுமக்கள் சேலையூர் போலீசில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து சேலையூர் போலீசார் விசாரணையில் போதை இளைஞர் திருவண்ணாமலை மாவட்டம் அப்பு பட்டு கிராமத்தை சேர்ந்த சிவராமன்(29) என்பதும், சென்னையில் கார் ஓட்டுனராக பணிசெய்த நிலையில் குடிபோதையில் தூக்கத்தில் இருந்தபோது எழுப்பியதால் ஆத்திரத்தில் தள்ளிவிட்டதாக கூறினார்.

இதனால் சிவராமன் மீது கொலை முய்ற்சி வழக்கு பதிவு செய்து 13ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதே வேளையில் குரோம்பேட்டையில் அனுமதிக்கப்பட்ட கிஷ்ணமூர்த்திதை உறவினர்கள் வேண்டுகோளின் படி போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பின்னந்தலையில் ரத்தகட்டு இருப்பதால் அறுவை சிகிச்சை செய்திட வேண்டும் சில நாட்கள் ஆகும் என கூறியதால் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மேல் சிகிச்சைகாக சேர்க்கப்பட்ட நிலையில் 14ம் தேதியான் இன்று காலை கிஷ்ணமூர்த்தி உயிரிழந்தார்.

இதனையடுத்து சேலையூர் போலீசார் சிவராமன் மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.

கிருஷ்ணமூர்த்தி பணிகாலத்திலும் சரி, ஒய்வு பெற்றபோதும் அக்கம் பக்கத்தினர் ஒரு பிரச்சினை என்று கூறினால் இரவு பகல் பாராமல் ஓடோடி சென்று உதவுபவர் என்றும் சம்பவம் நடந்த அன்று சிவராமன் போதையில் சாலையில் படுத்து கிடந்ததால் அவ்வழியில் செல்லும் வாகங்களால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவே சிவராமனை தண்ணீர் தெளித்து எழுப்பியுள்ளார்.

இதில் போதை தெளிய காரணமாக கிஷ்ணமூர்த்தி இருந்தயால் ஆத்திரத்தில் அடித்து கீழே தள்ளியபோது காயம் அடைந்து அதுவே அவரின் உயிரை பறிக்கும் விதமாக அமைந்துவிட்டது என தெரிவிக்கும் உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் இனி ஒரு பிரச்சினை என்றால் யாரிடம் சொல்வது என கண்ணீர் சித்தினார்கள்.