குரோம்பேட்டை ராதா நகரில் 2 மற்றும் 3 வது மண்டல குடியிருப்போர் நல வாழ்வு சங்கங்களின் இணைப்பு மையம் சார்பில் ராதா நகரில் தெருமுனை கூட்டம் நடந்தது.
செயலாளர் முருகையன் பொருளாளர் அரசி, நாசே சீனிவாசன், வியாபாரிகள் சங்கம் பி.ராம கிருஷ்ணன், குரோம் பேட்டை நாசர், பி.பழனி மற்றும் நலச்சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
அப்போது வைஷ்ணவா கல்லூரி அருகே கனரக வாகனங்கள் செல்லும் வகையில் இருவழி சுரங்க பாதை அமைக்க மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
சாலைகளில் ஆடு, மாடுகள் அலைவதையும் இதனால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. என்பதையும் கண்டித்தனர்.
மேலும் ஜி.எஸ். டி.சாலையில் சரவணா ஸ்டோர் அருகே சாலை தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.