அவரது நினைவு இல்லத்தில் செம்பாக்கம் மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் மற்றும் சந்திரனின் துணைவியாரும் தாம்பரம் மாநகராட்சி 39 வது வார்டு மாமன்ற உறுப்பினருமாகிய கிரிஜாசந்திரன் இளைய மகன் ஜெயபிரவீன் அவருடைய உருவ படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் செம்பாக்கம் பகுதி திமுக பலர் திரளாக கலந்து கொண்டனர். மாடம்பாக்கம் அர்ஷா கார்டன் பிரதான சாலையில் ஆட்டோ நிறுத்தம் அருகில் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. வேளச்சேரி பிரதான சாலை மகாலட்சுமி நகர் அலுவலகம் அருகிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன், பா.பிரதாப், இ.மனோகரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.