சென்னை உள்ளிட்ட இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை கடந்த 2 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘க்ரெடாய்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை, டில்லி-என்சிஆர், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புனே, அகமதாபாத் ஆகிய முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை கடந்த 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.