மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்கம், பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் குரோம்பேட்டை ராதா நகர் செயின்ட் மார்க்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடந்தது. அரிமா சங்க தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் இ.கருணாநிதி எம்எல்ஏ முகாமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் எம்.ஜெயபால், அரிமா சங்க நிர்வாகிகள் கே.எம்.ஜே அசோக், ஆர்.மோகன், காஞ்சி கணேசன், அழகப்பன், கஜேந்திரன், நாகராஜன், ஹரிகுமார் பொருளாளர் சங்கர் செயலாளர் சதீஷ்குமார் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.