முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின், மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்று காலை சென்னை மெரீனா கடற்கரைக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கு அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.