காலையில் பணிக்கு செல்லும் நேரம் என்பதால் சென்னை அண்ணாசாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.
இன்று காலை வழக்கம் போல வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருந்த போது அண்ணாசாலை பழைய ஆனந்த் தியேட்டர் எதிரே இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் திடீரென விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து கிடந்தார். அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த தொழில் துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்கள், அடிபட்டு கிடந்த நபரை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி ஓடி வந்து உடனடியாக அவரை மீட்டு முதலுதவி அளித்தார். பின்னர் அந்த நபருக்கு ஏதேனும் அடிபட்டதா என விசாரித்து அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்….