தேவையான பொருட்கள்: மாங்காய் -1, பாகு வெல்லம் -1/3 கப், உப்பு -சுவைக்கு ஏற்ப, துருவிய தேங்காய் -2 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன் பருவத்திற்கு, கடுகு – 1 டீஸ்பூன், உழுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது), கறிவேப்பிலை -சிறிதளவு, பெருங்காயம் தூள் 1 சிட்டிகை, எண்ணெய் -2 டீஸ்பூன் செய்முறை: மாங்காயை கழுவி தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். பின் குக்கரில் வைத்து மஞ்சள் தூள் மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து 2-3 விசில் வந்ததும் இறக்கவும். அதே சமயம், மற்றொரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் வெல்லம் போட்டு, தண்ணீர் ஊற்றி, சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டி, வெல்லம் தயார் செய்யவும். பிறகு குக்கரில் மாங்காய் சேர்த்து தயார் செய்த வெல்லத்தை சேர்த்து அடுப்பில் வைத்து சிறு தீயில் ஜாம் ஆகும் வரை நன்கு கொதிக்க விடவும். இதற்கிடையில் தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். அதன் பிறகு குக்கரில் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து கொதிக்கவிடவும்.மற்றொரு அடுப்பில் சிறிய கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து குக்கரில் மாங்காய் சேர்த்து கிளறினால் மாங்காய் பச்சடி ரெடி.