தாம்பரம் மாநகராட்சியில் 2024-25ம் ஆண்டுகான நிதி நிலை அறிக்கையை மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம் தாக்கல் செய்தார். அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடையணிந்த நிலையில் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் இன்று கூடியது.
இதில் துணைமேயர் ஜி.காமராஜ், ஆணையாளர் அழகுமீனா, அதிகாரிகள், மண்டலகுழு தலைவர் டி.காமராஜ், திமுக கவுன்சிலர்கள், ஜெகன், சுரேஷ், மதிமுக மாமன்ற உறுப்பினர் புஹிரா பானு நாசர் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
2024-25ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம் தாக்கல் செய்தார்.
மெத்தவரவு ₹945.33 கோடி, செலவு ₹905.19 கோடி, உபரி ₹40.14 கோடி என கூறினார்.
அப்போது கருப்பு சட்டை அணிந்தவாறு கலந்துக்கொண்ட அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் வேலை நடைபெறவில்லை மேயர், துணைமேயர் ஆகியோரிடம் கேள்வி எழுப்பிய நிலையில் நிதி நிலை அறிக்கை உள்ளிட்ட மாமன்ற கூட்டத்தை புரக்கணித்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தாம்பரம் மாமன்ற அதிமுக எதிர்கட்சி தலைவர் சங்கர் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
மாணவர்களின் உடல் திறன் மற்றும் விளையாட்டு பயிற்சி பெற தாம்பரம் மாநகராட்சியின் 70 வார்டுகளிலும் விளையாட்டு திடல் ஏற்படுத்தவும், மண்டலத்தில் ஒரு மகளிர் மேம்பாட்டுகான கூடம் கட்டிட முடிவெடுக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் தாம்பரம் மாமன்ற அதிமுக எதிர்கட்சி தலைவர் சங்கர் பேட்டியளித்தார்.