சிட்லபாக்கத்தில் வேகத்தடை காரணமாக இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி விழுந்த விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்தார். முறையாக வேகத்தடை, எச்சரிக்கை கோடுகள் அமைக்க வில்லை என சாலை அமைத்த ஒப்பந்ததார், மாநகராட்சி அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது, சிசிடிசி காட்சி உள்ளது.
சேலம் மாவட்டம் தலவாசல் அடுத்த வீரனூர் பகுதியை பூர்விகமா கொண்ட கூலி தொழிலாளி கோவிந்தராஜ் (34), இவர் மனைவி சந்தோசம், இரண்டு மகன், ஒரு மகளுடன் சிட்லப்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
நேற்று இரண்டு இரண்டு மகன்களுடன் சிட்லபாக்கம் சர்வ மங்கலா நகரில் இருசக்க வாகனத்தில் சென்றபோது சாலையில் அமைக்கப்பட்ட வேகதடையில் நிலைத்தடுமாறி இருசக்கர வாகனத்துடன் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விழுந்த கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அருகில் வீடு இருந்த நிலையில் கீழே விழுந்த இரண்டு மகன்களும் தாயிடம் தகவல் அளிக்க கண் சிமிட்டும் நேரத்தில் உயிரிழந்த உடலை கட்டியனைத்து அழுதது அங்கு சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் அங்குள்ள நலச்சங்கத்தினர் புதியதாக வழிமுறைகளை பின்பற்றாமல் வேகத்தை உயரமாக அமைத்ததாலும், அந்த வேகதடை குறித்து சாலையில் எச்சரிக்கை கோடுகள் இல்லாமல் உள்ளதால் தான் இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி விழுந்தது அதனை ஓட்டிவந்த கோவிந்தராஜ் உயிரிழப்புக்கு தாம்பரம் நகராட்சி சாலை போட்ட ஒப்பந்ததார்கள். மேற்பார்வை செய்யாத அதிகாரிகள் காரணம் என சமுக வலைத்தளத்திலும் புகார் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் பிரேத்தை கைப்பற்றி வழக்கமான விசாரனையை செய்து வருகிறார்கள்.