கொச்சியில் நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் செல் உள்நாட்டு நீர்வழிக் கப்பலை பிரதமர் தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
குலசேகரப்பட்டினம் எவுதளம் ஆண்டிற்கு 24 ராக்கெட்டுகளை விண்ணிற்கு அனுப்பும் நிறனுடையது.
தூத்துக்குடி துறைமுகத்தில் வெளிதுறைமுக சரக்கு பெட்டக முளையம் அமைக்க பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
ரூ.124.32 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.
ரூ.7,055 கோடியில் வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்.
மீன்சுருட்டி-சிதம்பரம் இருவழிப்பாதை, ஒட்டன்சத்திரம்- மடத்துக்குளம் 4வழிச்சாலையை தொடங்கிவைத்தார்.
நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பிரிவின் இருவழிப் பாதை. ஜித்தண்டஹள்ளி-தருமபுரி 4வழிச்சாலை தொடங்கப்பட்டது