அம்மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சரும் ஆன பசவராஜ் பாட்டில் இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
நாளை அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.