திருசசியில், பள்ளி கல்வித்துறை அமைச்சரின் அரசு வாகனத்தில், சிறை தண்டனை பெற்ற மாஜி அமைச்சர் அமர்ந்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., மற்றும் தொ.மு.ச., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ், முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சரும், தி.மு.க., துணை பொதுச் செயலாளருமான பொன்முடி உட்பட பலர் பங்கேற்றனர்.
விழா முடிந்த பின், ஊழல் வழக்கில், நீதிமன்றத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி, தேசியக் கொடி பொருத்திய அமைச்சர் மகேஷின் அரசு வாகனத்தில் முன் இருக்கையில் அமர்ந்து சென்றார்.
ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறை தண்டனை பெற்றதால், பதவி இழந்த முன்னாள் அமைச்சர், அரசு வாகனத்தில் பயணம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது…