
பிரதமர் மோடி, சரியாக, மதியம் 2:10 மணிக்கு பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார். ஹெலிபேடில் இருந்து மேடை வரை ஒரு கி.மீ., துாரம் மெட்டல் ரோடு அமைக்கப்பட்டு, அதன் மேல் ‘மேட்’ விரித்துள்ளனர். திறந்தவெளி வாகனம் மூலம் தொண்டர்களை பார்த்த படி, பிரதமர் வரும் வகையில் பிரத்யேக நடைபாதையாக இது அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்ந்திருப்பர். இவ்வாறு பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் அமைக்கப்படுவது இதுவே முதன்முறை என்கின்றனர். 50 பெரிய திரைகளுடன் கூடிய எல்.இ.டி., ‘டிவி’க்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. ஒரு மணி நேரம் சிறப்புரை ஆற்றும் பிரதமர், 3:45 மணிக்கு பல்லடத்தில் இருந்து புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார். மத்திய அமைச்சர் முருகன், மாநில தலைவர் அண்ணாமலை உட்பட, மாநில நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி வருகையொட்டி இன்றும், நாளையும் திருப்பூர் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தா விடுத்துள்ள அறிக்கை: பிரதமர் வருகையையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கையாக மாவட்ட எல்லையில் 26 மற்றும் 27ம் தேதிகளில்(இன்றும், நாளையும்) எவ்வித ட்ரோன்களோ, ஆளில்லா வான்வழி வாகனங்களோ பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.