இடம்: செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை
நாள்: 24.02.24
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை.
மருத்துவ உதவியாளருக்கான அடிப்படை தகுதிகள்
பிஎஸ்சி நர்சிங், அல்லது ஜி என் எம், DMLT(12 ஆம் வகுப்பிற்கு பிறகு இரண்டு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது கீழே குறிப்பிட்டுள்ள அறிவியல் சார்ந்த இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும், Zoology, Botany, Bio Chemistry, Micro Biology, Biotechnology.
வயதுவரம்பு: 19 இல் இருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
மருத்துவ உதவியாளருக்கான மாத ஊதியம்: Rs 15,435
தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மனிதவளத்துறை தேர்வு.
ஓட்டுநருக்கான அடிப்படை தகுதிகள்:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் Badge பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 24 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உயரம்: 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்
அனுபவம்: வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று மூன்று வருடங்கள் குறையாமல் இருக்க வேண்டும் மற்றும் Badge பெற்று ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
மாத ஊதியம்: Rs 15,235/-
தேர்வு முறை: எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், சாலை விதிகளுக்கான தேர்வு மற்றும் கண் பார்வை திறன் தேர்வு.
இதில் இலவச தாய் சேய் நல வாகனம் மற்றும் இலவச அமரர் உறுதி வாகனம் ஓட்டுனர்களுக்கான பணியிடங்களும் நிரப்பப்படும்(FHS/JSSK). இதற்கு மேலே குறிப்பிட்டுள்ள ஓட்டுனர் தகுதிகளுடன் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விவரம் அறிய: 04428888060, 04428888077,
04428888075.