தாம்பரம் அருகே போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட சேலையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது அபராதம் விதித்து,ஒழுங்கு நடவடிக்கை
கிழக்கு தாம்பரம் வேளசேரி சாலையில் சேலையூர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளர் பெருமாள் செல்போன் பேசியபடி இருசக்கர வாகனத்தில், தலைகவசம் அணியாமல் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியானது.
இதனையடுத்து உதவி ஆய்வாளர் பெருமாள் மீது செல்போன் பேசி கொண்டு, தலைகவசாம் அணியாமல் சென்றதாக இரண்டாயிரம் ரூபாய் அபாரத்தம் விதித்த போக்குவரத்து போலீசார், காவலர் உடையில் வீதிமீறலில் ஈடுபட்டதால் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க பரிந்துறை செய்தனர்.
ஏற்கனவே இரண்டு முறை போக்குவரத்து விதிமீறல் காரணமாக உதவி ஆய்வாளர் பெருமாள் மீது அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.