சரத்பவார் எச்சரிக்கை!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அல்லது நாளை கைது செய்யப்படலாம் என தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திரா பவார்) கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று சரத்பவார் கூறியதாவது,
ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் சிபுசோரனை கைது செய்தனர். டெல்லியில் இரண்டு அமைச்சர்களை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.
இப்போது டெல்லி முதல்வருக்கு ஏழாவது முறையாக அமலாக்கத்துறை சமன் அனுப்பி உள்ளது.
இன்று அல்லது நாளை கூட அவர் கைது செய்யப்படும் சூழ்நிலை உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்யும் நோக்கில் பிரதமர் மோடி செயல்படுகிறார்.
இவ்வாறு சரத்பவார் கூறியுள்ளார்.