தாம்பரம் அருகே சிட்லப்பாக்கத்தில் 10 வயது சிறுமியின் கால் கழிவறையில் சிக்கியது. ஒரு மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்.
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், பாபு தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தம்பதியினரின் 10 வயது சிறுமி இன்று காலை பள்ளி செல்வதற்காக கிளப்பியுள்ளார்.
முன்னதாக கழிவறைக்கு சென்ற சிறுமியின் வலது கால் கழிவறையில் மாட்டிக் கொண்டது சிறுமி கதறி கூச்சலிட்டுள்ளார்.
சிறுமியின் சத்தம் கேட்டு கழிவறைக்கு சென்று பார்த்த பெற்றோர் சிறுமியின் காலை எடுக்க முயற்சி செய்தும் முடியாததால் அருகில் உள்ள தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் கால் சிக்கிக் கொண்ட நிலையில் கழிவறை தளத்தில் உளி வைத்து உடைத்து சுமார் ஒரு மணி நேரம் போராடி பாதுகாப்பாக சிறுமியை மீட்டெடுத்தனர்.
தீயணைப்பு துறையினரின் துரித செயலை பார்த்த சிறுமியின் பெற்றோர்களும் மற்றும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.