தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் மண்டலம் வார்டு-32க்குட்பட்ட திருநீர்மலை பிரதான சாலையில் மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.22.36 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட LED மின்விளக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்இ.கருணாநிதி, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர்கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் து.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.