கடப்பேரி ராஜகோபால் நகர் பகுதியில் திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.68.00 இலட்சம் மதிப்பீட்டில் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்களை திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு முன்னிலையில் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் து.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.