ரூ.16.31 கோடி மதிப்பில் 601 வீரர். வீராங்கனைகளுக்கு சர்வதேச, தேசிய மற்றும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் – வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகள் மற்றும் 3 சதவீதம் விளையாட்டு வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டின் கீழ் நான்கு வீராங்கனைகளுக்கு அரசு பணி ஆணை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி, வணிகவரி ஆனணயர் டி. ஜகந்நாதன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, தேசிய சைக்கிளிங் வீராங்கனை தமிழரசி, தேசிய பாரா தடகள வீராங்கனை செல்வி.கீர்த்திகா, பில்லியர்ட்ஸ் விளையாட்டு விர் ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.