தாம்பரம் அருகே திருமண வீடு உள்ளிட்ட இரண்டு வீட்டில் கொள்ளை, இரண்டரை லட்சம் பணம், 2 லேப்டாப், வெள்ளி பெருட்கள் உள்ளிட்ட 5 லடசம் மதிப்புள்ள பணம் பொருள் கொள்ளை
தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம் நேரு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி(35) ஐ.டி கம்பெனியில் பணி செய்துவரும் நிலையில் இவரின் தம்பிக்கு மதுரையில் திருமணம் நடைபெறுகிறது. இதனால் வீட்டின் முன்பக்கம் வாழை மரம் கட்டி அளங்காரம் செய்த நிலையில் வீட்டை பூட்டிவிட்டு மதுரைக்கு சென்றனர். இன்று காலை அக்கம் பக்கத்தினர் வீட்டின் கிரில் கதவு பூட்டு உடைக்கப்படு கதவு நெம்பி திறக்கப்பட்டது இருந்தது. மேலும் அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு கலியமூர்த்திக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து உறவினர் முன்னிலையில் போலீசார் விசாரணை செய்தபோது ஒருலட்சம் பணம், வெள்ளி பொருட்கள், இரண்டு லேப்டாப் என இரண்டரை லட்சம் மதிப்புள்ள பொருள்கள் கொள்ளை போனது.
இதே வீட்டின் எதிர் திசையில் முதல் மாடியில் வசிக்கும் செல்வி என்பவர் அவர்களின் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு வேலுருக்கு சென்ற நிலையில் அவர் வீட்டில் இருந்து ஒன்றரை லடசம் பணம் கொள்ளை போனது.
இது குறித்து சேலையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் உதவி காவல் ஆணையாளர் கிரிஸ்டி ஜெயசீலன் உள்ளிட்ட காவல் துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.