இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி (யுவிகா) திட்டத்தில் சேர இன்று முதல் பதிவு செய்யலாம்.
9ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் இத்திட்டத்தில் சேர jigyasa.iirs.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வரும் மே 13ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியில், மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பண்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவு வழங்கப்படும்.