குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் குடியிருப்போர் நலசங்கத்தினர், வியாபாரிகள் என 100 க்கும் மேற்பட்டவர்கள் தீடீர் சாலை மறியல், வைஷ்ணவா கல்லூரி ரெயில்வே கேட்டில் நாள்தோரும் ரெயில் மோதி உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், அதற்காக திட்டமிடப்பட்ட அரசு பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் சுரங்கபாதை விரைவில் அமைக்கவேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை
குரோம்பேட்டை வைணவா கல்லூரி ரெயில்வே கேட்டை கடந்து ராதாநகர், நெமிலிச்சேரி, உள்ளிட்ட 2 லட்சம் பேர் பயன் படுத்தும் நிலையில் நாள்தோரும் ரெயில் மோதி விபத்துகளில் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டுனர்கள் உயிழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க 2014 முதலே கனரக வாகனங்கள் செல்லும் விதமாக ரெயில் சுரங்கப்பாத திட்டம் தீட்டப்பட்டது ஆனால் இதுவரை பணிகள் துவங்கவில்லை,
அதுபோல் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் வாகனங்கள் திரும்ப முடியாமல் தடுப்புகளை ஏற்படுத்தப்பட்டுள்ளதால் ஆட்டோ, வாகனங்களில் அதிக கட்டணம் கொடுத்து சுற்றிவர வேண்டியுள்ளது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்பு நலசங்க நிர்வாகிகள், வியாபாரிகள் என வைஷ்ணவா கல்லூரியில் அருகே இருந்து 2-3 மண்டல குடியிருப்போர் நலசங்கங்களின் இணைப்பு மைய்ய செயலாளர் முருகையன் தலைமையில் குரோம்பேட்டை வியாபாரிகள் சங்க தலைவர் ராமசந்திரன், துணைத் தலைவர் நாசர், நலசங்க பொருளாளர் அரசி, அரபோர் இயக்கத்தின் நிர்வாகி டேவிட் மனோகர் உள்ளிட்டவர்கள் ஊர்வலமாக நடந்துவந்து ரெயில்வே கேட்டில் புகுந்து ஜி.எஸ்.டி சாலை மறியலில் போராட்டம் நடத்திய நிலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் ஜி.எஸ்.டி சாலையில் சிறிந்து நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் சமாதானப்படுத்தியதை அடுத்து நலச்சங்க நிர்வாகிகள் கலைந்தனர்..