-ஜெயக்குமார் விளக்கம்?
மக்களவை தேர்தலில் எனது மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியல் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், 2014 தேர்தலில் ஜெயவர்தன் போட்டியிட கையெழுத்திட்டவர் ஜெயலலிதா.
அதனால் இது வாரிசு அரசியலில் வராது. அதிமுகவில் பற்று உள்ளவர்கள் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள்.
அதிமுகவில் உள்ளவர்களுக்கு வலை வீசி ஆள்பிடிக்கும் வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது.
பூச்சாண்டியை போல மிரட்டி ஆள்பிடிக்கும் வேலையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.