பிரதமர் மோடிக்கு சலிப்பு தட்டவில்லை இன்னும் நாட்டிற்காக துடிப்புடன் உள்ளார் அதனால் மீண்டும் முறை அவரை நம்பி வாக்களியுங்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தாம்பரம் அருகே பேச்சு, யாத்திரை பயணம் என தெரிவித்த நிலையில் கேரவேன் வாகனத்திற்கு காரில் காத்தி இருந்த நிலை வந்தவுடன் ஏறி பேசினார்:-
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் யாத்திரை தாம்பரம் அடுத்த செம்பாக்கதிற்கு வருவதாக தெரிவித்து கிழக்கு தாம்பரம்- வேளச்சேரி சாலை தடுப்பு சுவரில் கண் கூசும் அளங்கார விளக்குகளுடன் பாஜக விளம்பர பதாகைளை அமைத்தனர்.
யாத்திரை கூட்டத்திற்கு வருகை புரிந்த அண்ணாமலை அங்கு கூட்டப்பட்ட கூட்டத்தில் பேசினார்,:-
அண்ணாமலை பேச்சு:- குஜராத் முதல்வர், பிரதமர் உள்ளிட்ட பதவிகளில் பிரதமர் மோடி வகித்தாலும் அவருக்கு சலிப்பு தட்டவில்லை, துடிப்புடன் நாடு முன்னேற்ற பாதையில் செல்ல அவர் மீண்டும் ஒருமுறை ஆசைபடுகிறார் அவர் ஒருவரை நம்பி வாக்களியுங்கள்.
தமிழகத்தில் முக்கிய இரண்டுகட்சிகள் “பங்காளிகள்” ஒன்றசேர்ந்து பாஜக வர கூடாது என நினைக்கிறார்கள் என கூறினார்.
முன்னதாக அண்ணாமலை வருகைகாக பாரதமாதா, அவ்வையார் போன்ற போற்றகூடியவர்கள் போல் வேடமணிந்த பெண்கள் வரவேற்பு அளித்தனர்.
இந்த நேரத்தில் அண்ணாமலை படப்பாடலான தேவுடா தேவுடா பாடல் ஒலிபரப்பானபோது பாஜக கூட்டத்திற்கு வந்த முதியவர் ஒருவர் குத்தாட்டம் போட்டார் இதனை காட்ட மற்றநபர்கள் சிறித்துவிட்டு சென்றனர்.