இன்று மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
வரவிருக்கும் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த வேண்டிய அவசியமில்லை. 2014ல் ஜெயலலிதா பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த வில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்
மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற அவதூறு வழக்கு போட்டோம். திராணி இருந்தால் இந்த அரசை செய்ய சொல்லுங்கள்
திமுக கூட்டணியிலிருந்து எத்தனை கட்சிகள் வெளியே போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு இரட்டை இலை சின்னத்தை எப்படி முடக்க முடியும்? சிலரின் ( ஓபிஎஸ் தரப்பு) ஆசை நிறைவேறாது .அது நிராசையாகவே இருக்கும்.
திமுக ஆட்சி மீது மக்கள் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள். இந்த ஆட்சி தொடர்ந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.