ராமர் கோயில் நிகழ்ச்சியில் ஏழைகள் காணப்படவில்லையே..ஏன்.? என்று மக்களிடம் கேட்டார்.
அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா, அதானி, அம்பானி போன்றோர் அங்கே காணப்பட்டனர்.
ஏழைகள் மட்டுமல்ல, ஜனாதிபதியைக் கூட அங்கு காணவில்லை என்றார்.
ராமர் கோயில் நிகழ்வு என்பது, கோடீஸ்வரர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்களின் நிகழ்ச்சி என்று எடுத்துரைத்த ராகுல் காந்தி, தனது பேச்சில் அமிதாப் பச்சன் – ஐஸ்வர்யா ராய் பெயரை 6 முறை உச்சரித்தார்.
எல்லைக்கு வந்ததும், உ.பி.,க்குள் வந்திருப்பது கண்கூடாக தெரியவந்தது என்றும் கிண்டலடித்தார்.
வரும் நாட்களில் ராகுல் காந்தியின் உரைவீச்சு ஆவேசமாக இருக்கும் என நினைக்கிறேன்.
எந்த ஊடகமும் அதை ஒலிபரப்பாது. எனவே, ராகுல் காந்தியின் உ.பி., மற்றும் மஹாராஷ்டிரா உரைவீச்சுகள் அகில இந்திய அளவில் மக்களிடையே சென்றடைய வேண்டும்.