இந்த மலரை அறப்போர் இயக்கத்தின் தலைவர் ஜெயராம், வெங்கடேஷ் வெளியிட்டார். முதல் மலரை சி.வி ராஜகோபால் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நங்கநல்லூர் ராமராவ், சிட்லப்பாக்கம் விஸ்வநாதன், தாம்பரம் சீதாராமன் கலந்துகொண்டு பேசினார்கள்.மூத்த குடிமக்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். இறுதியில் அறப்போர் இயக்கத்தின் தலைவர் ஜெயராம் வெங்கடேசன் சிறப்புரை ஆற்றிய பிறகு வி.சந்தானம் ஏற்புரை ஆற்றினார். வக்கீல் ராமதாஸ் நன்றி கூறினார்.