தாம்பரம் மாநகராட்சி சார்பில் குப்பை எடுப்பதற்கு தனியாக ஒப்பந்தக்காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். வீடுகளில் பொதுமக்கள் மரம் வளர்க்கின்றனர் ஆனால் மரத்தில் இருந்து வரும் மரக்கழிவுகளை எடுப்பதற்கு ஊழியர்கள்பணம் கேட்கின்றனர். வீட்டிற்கு வெளியே கொண்டு போய் மரக்கழிவுகளை வைத்தாலும் அபராதம் விதிப்போம் இல்லை என்றால் அதை எடுப்பதற்காக தனியாக பணம் செலுத்த வேண்டும் என்கின்றனர்.இதனால் பொதுமக்கள் இனிமேல் வீடுகளில் மரம் வளர்ப்பதை விட்டு விடுவார்கள் போல் தெரிகின்றது.இப்போது இலையுதிர் காலம் என்பதால் சாலைகளில் நிறைய மரங்களில் இருந்து விழும் இலைகள்காய்ந்து சருகுகள் தேங்கி கிடக்கின்றது. அதேபோல் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெய்த மழையினால் சாலைகளில் வெள்ளம் ஓடியது. அந்த வெள்ளம் ஓடும் போது அதில் வரும் மணல், மணல் குன்று ஆகி சாலைகளில் தேங்கி கிடக்கின்றன.அதுவும் இதுவரை அகற்றப்படாமல் ஆங்காங்கே அப்படியே இருக்கின்றது. இதே போல் கால்வாய்களில் குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு இன்னும் அதையும் அப்புறப்படுத்தாமல் அப்படியே அலட்சியமாக விட்டு விடுகின்றர் என்று அப்பகுதி பொதுமக்கள் மிகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் இதனால் அப்பகுதிகளில் கொசுக்களும் பூச்சிகளும் இந்த மரக்கழிவினாலும் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாகவும் நிறைய உற்பத்தி ஆகின்றன.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் மிகவும் வேதனையுடன் தெரிவித்தனர். மாநகராட்சி நிர்வாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர் செய்து தருவார்களா என்று ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.பணிகளை ஒப்பந்தம் எடுத்துச் செய்யும் ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு முழுமையாக எந்த வேலையும் செய்யாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது பற்றி அந்த பகுதியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது. – எங்கள் பகுதிக்கு குப்பைகளை அகற்றுவதற்கு தூய்மை பணியாளர்களும், குப்பை எடுக்கும் வண்டிகளும் குறைந்த அளவுதான் உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளோம். கூடிய விரைவில் சரிசெய்யப்படும் என்று கூறினார்கள்.