
பல்லாவரம் அருகே கவனகுறைவாக தண்டவளத்தை கடந்த போது மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவர் உயிரழந்தார்.
சென்னை பல்லாவரம் ,குரோம்பேட்டை ரயில் நிலையம் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் தலைசிதைந்து கிடப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி சோதனை செய்த போது அவர் வைந்திருந்த ஏ.டி.எம் கார்டு கொண்டு விசாரனை செய்தில்,
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வினித் குமார் (20) என்பதும் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததும் நேற்று இரவு கவனகுறைவாக தண்டவாளத்தை கடந்த போது கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயில் மோதி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.