
இன்று காலை சென்னைகடற்கரை மார்கமாக சென்ற மின்சார ரெயில் திரிசூலத்தை கடந்து மீனம்பாக்கம் செல்லும் முன்பாக தீடீரென தண்டவாளத்தில் ஓசை கேட்டுள்ளது. இதனால் ரெயில்வே அதிகாரிகளுக்கு ஒயர்லெஸ் மூலம் தவல் அளித்தால், அடுத்து அடுத்து பின் தொடர்ந்த மின்சார ரெயில்கள் ஆங் ஆங்கே நிறுத்தப்பட்டன. இதனால் சென்னை கடற்கரை மார்கமாக ரெயில் சேவை பாதிப்பு அடைந்தது.
அதனையடுத்து ரெயில்வே தொழில் நுட்ப அதிகாரிகள் ஊழியர்கள் விரிசல் ஏற்பட்ட இடத்திற்கு சென்று தற்காலிகமாக தண்டவாளத்தை கிளாம்ப் மூலம் இணைத்து ரெயில்களை இயக்க அனுமதித்தனர். அதனையடுத்து ஒன்றன் பின்னர் ஒன்றாக தண்டவாள விரிசல் பகுதியில் குறைந்த வேகத்தில் கடந்து சென்றது.
இதனால் ஒன்றறய் மணிநேரம் அந்த மார்க்கத்தில் மின்சார ரெயில்சேவை பாதிப்பு அடைந்தது.
இதனையடுத்து முக்கிய நெரிசல் நேரம் கடந்த பின்னர் முழுமையாக சீரமைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இதுபோல் குளிர்காலத்தில் தண்டவாளங்கள் சுருங்குவதாலும், கேடைகாலத்திலும் தண்டவாளங்கள் விரிவதாலும் விரிசல் ஏற்படும் என்றும் ரெயில்வே தொழில்நுட்ப அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.