ரம்யா கிருஷ்ணன் நடிப்பு, கதாபாத்திரம் படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்தது.

இப்பட கே.எஸ்.ரவிக்குமார்-ரஜினி இடையே நல்ல நட்பு ஏற்பட இப்படம் தான் காரணமாக இருந்தது என்றே கூறலாம். இப்போதும் தொலைக்காட்சியில் படையப்பா படம் திரையிடப்பட்டால் TRPயில் டாப்பில் வரும்.

குழந்தை யார்

இப்படத்தில் என் பெயர் படையப்பா என்ற பாடல் இருக்கிறது, வெளிவந்த நேரத்தில் பட்டிதொட்டி எங்கும் கலக்கிய ஒரு பாடல். இதில் பாசமுள்ள மனிதரப்பா, நான் மீசை வைத்த குழந்தையப்பா என ஒரு சிறு குழந்தையின் முகம் காட்டப்படும்.

அவர் யார் என்ற விவரம் தான் இப்போது வெளியாகி வைரலாகிறது. அவர் வேறுயாரும் இல்லை இப்போது தமிழ் சின்னத்திரையில் நாயகியாக கலக்கிவரும் ஹேமா பிந்து தானாம் அந்த குழந்தை.