சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார் இவருடைய மனைவி சுந்தரி இவர்களின் இரண்டரை வயது மகன் பிரதீப்,

நேற்று இரவு அருணாச்சலம் மது போதையில் ஆட்டோவில் தனது மகன் பிரதிப் உடன் மப்பேடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்க்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது மப்பேடு சந்திப்பில் ஆட்டோவின் பின்னால் செல்போனில் விளையாடி கொண்டிருந்த பிரதீப் தீடீரென தவறி சாலையில் விழுந்துள்ளார்.

அப்போது பின்னால் வந்த மினி வேன் பிரதிப் தலையின் மீது ஏறி இறங்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த அருணாச்சலம் உடனடியாக ரத்த வெள்ளத்தில் இருந்த மகன் பிரதீப்பை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே பிரதிப் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரனை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மினி வேன் ஓட்டுனர் மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தந்தை கண் முன்னே விபத்தில் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.