
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், புனித தோமையார் மலை கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளாக குத்தகை என ஆக்கிரமித்து வணிக நோக்கத்தில் பயன்படுத்திய நபர்கள் சர்வே என் 480ல் டோமிக் சேவியர் என்பவர் பெயரில் 3196 ச.அடி, சர்வே எண்.458ல் ஹேமலதா என்பவர் 29,450 ச.அடி, சர்வே எண்
1352ல் நிசாருதீன் என்பவர் பெயரில் 32,500 ச.அடி என மொத்தம்
65,156 ச.அடி ஆகும், என இப்பகுதியில் அரசு நில மதிப்பு ஒரு ச.அடி 10 ஆயிரம் என்கிற நிலையில் மூன்று பேரில் உள்ள மொத்தம் 1.49 ஏக்கர் நிலத்தின் மொத்த மதிப்பீடு 800 கோடிக்கு மேல் இருக்கும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
இவர்கள் அரசுடைமையாக்கபட்ட வங்கி, கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகள் என ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த நிலையில் பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் புனித தோமையார்மலை காவல் உதவி ஆணையாளர் முரளி உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புடன் விளம்பர பலகைகளை அகற்றிவிட்டு, அரசுக்கு சொத்தமான இடம் என அறிவிப்பு பதாகைகளை வைத்து அரசு கட்டுபாட்டில் கொண்டுவந்தனர்.
ஏற்கெனவே இதே புனிய தோமையார் மலை கிராமத்தில் 1000 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீடக்கப்பட்ட நிலையில் மேலும் அதிரடியாக 800 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.