ஆனால், இதை அவர்கள் தரப்பில் இருந்து அறிவிக்கவில்லை. ஆனால், வெளிவந்த தகவலை உறுதி செய்யும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயதார்த்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. இதை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி நிச்சயதார்த்த வீடியோ வெளியாகியுள்ளது.

இவர்களுடைய நிச்சயதார்த்தத்தில் நடிகர் விஷால் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளார். அர்ஜுனின் உறவினரும் கன்னட நடிகருமான துருவ சார்ஜா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் கலந்துகொண்டுள்ளனர்.

நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது. இதோ நிச்சயதார்த்த வீடியோ..