ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட். இவர் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் அந்நிய செலாவணி விதிமீறல் தொடர்பாக வைபவ் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முதல்வரின் மகன் வைபவ் கெலாட் நேற்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். வைபவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர் ந்து வெளியே வந்த வைபவ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘‘10-12 ஆண்டுகள் பழைய பொய் குற்றச்சாட்டை அமலாக்கத்துறை தற்போது கையிலெடுத்துள்ளது. அதுவும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின் விசாரணையை தொடங்குகிறது. நானோ அல்லது எனது குடும்பத்தாருக்கோ வெளிநாட்டு பணவரித்தனை குறித்த எந்த தொடர்பும் இல்லை. மிக குறைந்த கால அவகாசத்தின் என்னை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. நான் அவர்களிடம் 15நாட்கள் அவகாசம் கேட்டேன். அவர்கள் எனக்கு அதிக அவகாசம் தந்திருக்க வேண்டும்” என்றார்.