இதை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிதி இயக்குநர் பிரசன்ன குமார் ஆச்சார்யா தலைமையில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து வினா-விடை போட்டி, ஊழல் வேண்டாம் என்று சொல்லி தேசத்திற்கு அர்ப்பணி என்ற தலைப்பில் விவாதப் போட்டி நடத்துதல், விழிப்புணர்வு நிகழ்வு நடத்துதல் ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், தலைமை பொது மேலாளர் முரளி, தலைமை லஞ்ச ஒழிப்பு அலுவலர் வினோத் குமார், மின் கண்காணிப்பு பொறியாளர் அருள்மணி, பொது மேலாளர்கள் சுரேஷ், ஆண்டோ ஜோஸ் மேனாச்சேரி, ரங்கநாதன், ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.