சென்னை ஆலந்தூரி கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக இளைஞரணி சார்பில் ஒருநாள் ஹாக்கி போட்டி நடைபெற்றது. 16 ஆடவர் அணிகள் கலந்துகொண்ட நிலையில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஹாக்கி பந்தை கோல் கம்பத்தை நோக்கி அடுத்து ஹாக்கி போட்டியை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து விருவிருப்பாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெரும் அணிகளுக்கு ரொக்க பரிசுகளுடன் பதக்கங்கள் வழங்கப்பட்டன.