முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அபசும்பொன்‌ முத்துராமலிங்கத்‌ தேவர்‌ அவர்களின்‌ 116-வது பிறந்த நாளையொட்டி, மதுரை, கோரிப்பாளையத்தில்‌ உள்ள பசும்பொன்‌ முத்துராமலிங்கத்‌ தேவர்‌ அவர்களின்‌ திருவுருவச்‌ சிலைக்கு அருகில்‌ வைக்கப்பட்டுள்ள திருவுருவப்‌ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்‌. இந்நிகழ்வின்போது, அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌, மதுரை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ எம்‌.எஸ்‌.சங்கீதா, மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.