பம்மல் பசும்பொன் நகர் விளையாட்டு திடலில், பசும்பொன் நகர் பொது நலச்சங்கம், பசும்பொன் நகர் அறக்கட்டளை மற்றும் ஊர்பொதுமக்கள் இணைத்து நடத்திய தேசியத் தலைவர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் 116வது ஜெயந்தி மற்றும் 61வது குருபூஜை விழாவில் குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவங்கள் துறை அமைச்சர் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இவ்விழாவில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்-காஞ்சி வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் -தாம்பரம் மாநகர கழக துணை செயலாளர் க.வசந்தகுமாரி, தாம்பரம் மாநகராட்சி துணை மேயர்- தாம்பரம் மாநகர கழக அவைத் தலைவர் கோ.காமராஜ், தாம்பரம் மாநகராட்சி -மண்டலம் 1 குழுத் தலைவர் -பம்மல் தெற்கு பகுதி செயலாளர் வே.கருணாநிதி, மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக நிர்வாகிகள்,வட்ட கழக செயலாளர்கள்,மாவட்ட- மாநகர அணிகளின் அமைப்பாளர் -துணை அமைப்பாளர், பகுதி கழக அணிகளின் அமைப்பாளர்- துணை அமைப்பாளர், வட்ட கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.