தாம்பரம்‌ மாநகராட்சி பம்மல்‌ மண்டலம்‌, வார்டு-8குட்பட்ட, பஜனை கோயில்‌ தெரு பகுதியில்‌ ரூ.2500 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக அமைக்கப்பட உள்ள நகர்புற நல வாழ்வு மைய கட்டடப்‌ பணியினை மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌ அடிக்கல்நாட்டி தொடங்கி வைத்தார்‌. இந்நிகழ்ச்சியில்‌ பல்லாவரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ இ.கருணாநிதி,‌ துணை மேயர்‌ கோ.காமராஜ்‌‌, பம்மல்‌ மண்டலக்‌ குழுத்‌ தலைவர்‌ வே.கருணாநிதி, உதவி செயற்பொறியாளர்‌ கோவிந்தராஜ்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.