குரோம்பேட்டை வட்டார நாடார் ஐக்கிய சங்கம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தெற்கு தெருவில் உள்ள திருமண கூடத்தில் நடைபெற்றது. ஏ.ஏ.முருகேசன் நாடார் வரவேற்புரை ஆற்றினார். தலைவர் வி.எஸ்.பி.மதிவாண நாடார் சங்கத்தின் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார். ஆண்டறிக்கையை பொதுசெயலாளர் டி.எஸ்.முருகேசன் நாடார் வாசித்தார். வரவு செலவு கணக்குகளை மோரிஸ் நாடார் வாசித்தார். இந்நிகழ்வில் மூத்த உறுப்பினரும் ஆலோசகரமான ஏ.ராமஜெயம் நாடார். செயலாளர்கள் எஸ்.வெற்றிவேல் நாடார். எஸ். முருகேசன் நாடார். சங்க துணை தலைவர் டி.தர்மபால் நாடார். மற்றும் திரளான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.